கொரானாவால் மனித நடமாட்டமில்லை -மதுக்கடையை உடைத்து -மது குடித்த  யானைகள்…

கொரானாவால் மனித நடமாட்டமில்லை -மதுக்கடையை உடைத்து -மது குடித்த  யானைகள்…

ஆனால்  சீனாவின் யுனான் மாகாணத்தில் வசிக்கும் 14 யானைகள் கொண்ட கூட்டம் இந்த வைரஸைப் பற்றி எந்த கவலையும் படவில்லை. மேலும் அவைகளைச் சுற்றி மக்கள் நடமாட்டமே  இல்லாததால் அந்த யானைகள் அதைப் பயன்படுத்திக் கொண்டது. அந்த யானைகள் கூட்டம் ஒரு கிராமத்தில் ஒரு மதுபான கடையை உடைத்து அங்கு  நுழைந்து  30 பாட்டில்கள் ஒயின் குடித்தன. 

உலகெங்கிலும்  245,859 பேர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,045 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் இறந்துள்ளனர்.

ஆனால்  சீனாவின் யுனான் மாகாணத்தில் வசிக்கும் 14 யானைகள் கொண்ட கூட்டம் இந்த வைரஸைப் பற்றி எந்த  கவலையும் படவில்லை.  மேலும் அவைகளைச் சுற்றி மக்கள் நடமாட்டமே  இல்லாததால் அந்த யானைகள் அதைப் பயன்படுத்திக் கொண்டது. அந்த யானைகள் கூட்டம் ஒரு கிராமத்தில் ஒரு மதுபான கடையை உடைத்து அங்கு  நுழைந்து  30 பாட்டில்கள் ஒயின் குடித்தன. 

மதுவைத் குடித்தபின் அந்த 14 யானைகளும் அருகிலுள்ள தோட்டத்தில்  மயக்கத்தில் தூங்கிவிட்டன. 
அவைகள் குடித்த  ஒயினில் எவ்வளவு  ஆல்கஹால் இருக்கிறதென தெரியவில்லை, ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, யானைகள் 0.05 கிராம் முதல் 100 மில்லி வரை ஆல்கஹால் கலந்த ஒயினை குடித்தன.அதாவது 3 டன் எடையுள்ள ஒரு யானை 10 லிட்டர் ஆல்கஹால் உட்கொண்டிருக்க வேண்டும். பர்வீன் கஸ்வான் என்ற பாதுகாவலர் , யானைகள்  மதுவுடன் பழங்களையும்   சாப்பிடவிரும்புகின்றன என்றார். 

 ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கஸ்வான் கூறுகையில், “யானைகள் மதுவை விரும்புகின்றன என்பதை அறிந்து சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். அவை அதை மிகவும் விரும்புகின்றன. மஹுவா பழங்கள் & பழுத்த அன்னாசிப்பழம், பலாப்பழம் ஆகியவை அவைகளுக்கு மிகவும் பிடிக்கும் . ”

அவர் மேலும் கூறுகையில், “பழங்குடியினர் மதுபானங்களை சேமித்து வைக்கும் இடங்களுக்கு சென்று  அவைகள்  தோண்டி எடுத்து குடிக்கின்றன” என்றார்.