கொரானாவால் பாதிக்கும் பாலிவுட் படவுலகம் -சூப்பர்ஸ்டார்களின் சுற்றுலாவும் ஒத்திவைப்பு 

 

கொரானாவால் பாதிக்கும் பாலிவுட் படவுலகம் -சூப்பர்ஸ்டார்களின் சுற்றுலாவும் ஒத்திவைப்பு 

சீன நகரமான வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயை உலகம் தற்போது சமாளித்து வருகிறது, இப்போது அது பல நாடுகளில் பரவி வருகிறது. WHO கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக அறிவித்த நாள் முதல் ,  பல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் வெளியீட்டை  ஒத்திவைக்கப்பட்டன.

பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சல்மான் கான் ஆகியோர் வரும் மாதங்களில் சர்வதேச சுற்றுப்பயணம்  செல்லவிருந்தனர். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தங்கள் பயணத்தை ஒத்திவைத்துள்ளனர்.

சீன நகரமான வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயை உலகம் தற்போது சமாளித்து வருகிறது, இப்போது அது பல நாடுகளில் பரவி வருகிறது. WHO கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக அறிவித்த நாள் முதல் ,  பல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் வெளியீட்டை  ஒத்திவைக்கப்பட்டன. இந்திய அரசாங்கமும் சில பயணக் கட்டுப்பாடுகளை விதித்ததுடன், வெளிநாட்டு பயண  திட்டங்களை ரத்து செய்யுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியது. கொரோனா வைரஸ்க்கு மத்தியில், சூப்பர் ஸ்டார்ஸ் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சல்மான் கான் ஆகியோரும் தங்கள் சர்வதேச சுற்றுப்பயணங்களை ரத்து செய்துள்ளனர்.

corona

அமெரிக்காவின் சிகாகோ, நியூ ஜெர்சி, டல்லாஸ், சான் ஜோஸ், வாஷிங்டன் மற்றும் அட்லாண்டா பகுதியில் வாழும் தன் ரசிகர்களைச் சந்திக்கும் அவரின்  சர்வதேச  சுற்றுப்பயணம் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கவிருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுநோயால்  அமைப்பாளர்களும் நிகழ்வுகளை ஒத்திவைத்துள்ளனர். 

மறுபுறம், தனது சகோதரர் சோஹைல் கான் ஏற்பாடு செய்த வருடாந்திர இசை நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்கா செல்ல இருந்த சல்மான் கானும்,பயணத்தை ஒத்தி வைத்துள்ளார் . சல்மானின் குழு “இப்போது  பயணம் செய்வது நல்லதல்ல. கொரானா பயம் தணிந்தவுடன் புதிய தேதிகளை அறிவிப்போம்.என்றனர். சல்மானின் திரைப்படமான ராதே யுவர் மோஸ்ட் வாண்டட் பாய் தாய்லாந்து படப்பிடிப்பும் கோவிட் -19 காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது