‘கொரானாவால் தவிக்கும் குடிமகன்’- வீட்டுக்கே மது வழங்க கேட்டார் -நீதிபதி 50000 ரூபாய் அபராதம் விதித்தார்..

‘கொரானாவால் தவிக்கும் குடிமகன்’- வீட்டுக்கே மது வழங்க கேட்டார் -நீதிபதி 50000 ரூபாய் அபராதம் விதித்தார்..

கேரளாவின் கொரானா பாதிப்பால் மார்ச் 31 ம் தேதி வரை அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு ஜோதிஷ் என்ற ஒருவர் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பதால் மதுவை ஆன்லைனில் வீட்டுக்கே வழங்க கோர்ட் உத்தரவிட கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

கேரளாவில் ஆன்லைனில் வீட்டுக்கே மதுபானம் வழங்க உத்தரவிடக்கோரி மனுசெய்த ஒருவரின் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட் அவருக்கு 50000 ரூபாய் அபராதமும் விதித்தது.

கேரளாவின் கொரானா பாதிப்பால் மார்ச் 31 ம் தேதி வரை அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு ஜோதிஷ் என்ற ஒருவர் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பதால் மதுவை ஆன்லைனில் வீட்டுக்கே வழங்க கோர்ட் உத்தரவிட கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

wine-shop-90.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் அந்த நபரை கடுமையாக விமர்சித்து இந்த நேரத்தில் இந்த மாதிரியான மனுக்களை தாக்கல் செய்ததை கண்டித்துள்ளார் .மேலும் அவருக்கு 50000 ரூபாய் அபராதம் விதித்து, அந்த பணத்தை கேரளா ஏழைகள் வளர்ச்சி நிதிக்கு இரண்டு வாரங்களுக்குள் அளிக்குமாறு உத்தரவிட்டார்