கொரானாவால் தள்ளி போகும் பள்ளி சேர்க்கை -கேந்திரிய வித்யாலயா அட்மிஷன் ஒத்திவைப்பு .. 

கொரானாவால் தள்ளி போகும் பள்ளி சேர்க்கை -கேந்திரிய வித்யாலயா அட்மிஷன் ஒத்திவைப்பு .. 

கொரானா வைரஸ் பரவும் காரணத்தால் கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளியின் 2020 ம் ஆண்டுக்கான ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை தள்ளி வைக்கப்படுகிறது .திருத்தப்பட்ட அட்டவணை கொரானா ஊரடங்கு உத்தரவு  முடிந்தபிறகு   வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சேர்க்கைக்கான புதிய அட்டவணை kVS இன் அதிகாரப்பூர்வ தளமான  kvsangathan.org.in அல்லது kvsangathan.nic.in இல் கிடைக்கும்.

kendriya-vidyalaya-8

பள்ளியில் சேர்க்க ஆர்வமுள்ள அனைத்து பெற்றோர்களும் கே.வி. சேர்க்கைக்கு kvsonlineadmissions.in இல் பதிவு செய்து பின்னர் அதில் கூறப்படும் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு காலியாக உள்ள  மொத்த இடங்களில், 15 சதவீத இடங்கள் எஸ்சிக்கும், 7.5 சதவீத இடங்கள் எஸ்.டி.க்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.ஒன்றாம் வகுப்பு  சேர்க்கைக்கு, மார்ச் 1 ஆம் தேதி குழந்தைக்கு குறைந்தபட்சம் 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்,
இந்த அட்மிஷன்   ஜூலை 31 அன்று முடிவடைகிறது. ஆனால் இந்த ஆண்டு சேர்க்கை கொரானா தாமதத்தால்  தேதிகள் மாறக்கூடும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கே.வி.எஸ் இன் அதிகாரப்பூர்வ தளத்தின்  மூலம்   விவரங்களை சரிபார்க்கலாம்.