கொரானாவால் சிக்கலில் சிவப்பு விளக்கு பெண்கள் -சோகத்தில்  கண்ணீரில் நனையும் கண்கள் 

 

கொரானாவால் சிக்கலில் சிவப்பு விளக்கு பெண்கள் -சோகத்தில்  கண்ணீரில் நனையும் கண்கள் 

கொரானா பாதிப்பு கடைசியில் சிவப்பு விளக்கு பெண்களையும் விடவில்லை. மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் பாலியல் தொழில் செய்து வரும் பங்களாதேஷை சேர்ந்த ஆறு பெண்கள்,  கொரானாவால் தொழில் நலிவடைந்து போனதால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இம்மாத இறுதியில் இருந்தனர்

கொரானா பாதிப்பு கடைசியில் சிவப்பு விளக்கு பெண்களையும் விடவில்லை. மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் பாலியல் தொழில் செய்து வரும் பங்களாதேஷை சேர்ந்த ஆறு பெண்கள்,  கொரானாவால் தொழில் நலிவடைந்து போனதால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இம்மாத இறுதியில் இருந்தனர் .அதற்காக டிக்கெட் பதிவும் செய்திருந்தனர் .ஆனால் திடீரென மத்திய அரசு பங்களாதேஷுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை ரயில் ,பேருந்து விமான போக்குவரத்தை ரத்து செய்ததால் அவர்களால் போகமுடியவில்லை .மார்ச் 26ம் தேதி அவர்கள் ஊருக்கு செல்ல டிக்கெட் போட்டிருந்தனர், ஏனெனில் அவர்களின் பெர்மிட் இந்த மாதத்தோடு முடிவடைகிறது.

red-light-area-89

இதுபற்றி ரூபா என்ற பாலியல் தொழிலாளி கூறுகையில் ,நாங்கள் மூன்று மாத பெர்மிட்டில் இங்கு வேலை தேடி வந்து விபச்சாரத்தில் தள்ளப்பட்டோம்  ,இப்போது திடீரென போக்குவரத்தை நிறுத்தியதால் எப்படி போவதென தெரியவில்லை .என்னுடைய ஏழு வயது மகளுக்கு நான் என்ன பதில் சொல்வதென தெரியவில்லை .அவள் அடிக்கடி போன் செய்து என்னை கூப்பிடுகிறாள் ,நான் பலமுறை ஊருக்கு வருவதாக ஏமாற்றியதால் இப்போது அவள் என்னிடம் பேசுவதே இல்லை “என்று கண்ணீர் மல்க கூறினார்.

red-light-area-56

கடந்த எட்டு ஆண்டுகளில், பங்களாதேஷிலிருந்து கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கூட்டிவரப்பட்ட 1,750 பேரை திருப்பி அனுப்பியுள்ளோம் .பெண்கள் தங்களின் வீட்டிற்கு திரும்பி போவது குறித்து அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு தகவல் கொடுத்திருந்தனர். இப்போது அவர்களின் காத்திருப்புகாலம்  நீடித்தால் இது அவர்களுக்கு வேதனையாக இருக்கும், ”என்று பாலியல் கடத்தல் மீட்பு அறக்கட்டளையின் நிறுவனர் திரிவேனி ஆச்சார்யா கூறினார்.