“கொய்யால.. இளையராஜா சொன்ன இதத்தானேடா ஏ.ஆர்.ரஹ்மானும் சொன்னாரு?

 

“கொய்யால.. இளையராஜா சொன்ன இதத்தானேடா ஏ.ஆர்.ரஹ்மானும் சொன்னாரு?

‘96 படத்தில் தன் பாடல்கள் எடுத்தாளப்பட்டது குறித்து ஒரு நாளிதழுக்கு இளையராஜா அளித்த காரசாரமான பேட்டித்தான் கடந்த 24 மணி நேரமாக வலைதளவாசிகளுக்கு அவல். முழுங்கிவிடும் முடிவுக்கே வராமல் நான்ஸ்டாப்பாக மென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு ராஜ ரசிகர் ஒருவர் முகநூலில் எழுதியிருக்கும் ஒரு சபாஷ் பதிவு இதோ…

‘96 படத்தில் தன் பாடல்கள் எடுத்தாளப்பட்டது குறித்து ஒரு நாளிதழுக்கு இளையராஜா அளித்த காரசாரமான பேட்டித்தான் கடந்த 24 மணி நேரமாக வலைதளவாசிகளுக்கு அவல். முழுங்கிவிடும் முடிவுக்கே வராமல் நான்ஸ்டாப்பாக மென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு ராஜ ரசிகர் ஒருவர் முகநூலில் எழுதியிருக்கும் ஒரு சபாஷ் பதிவு இதோ…

ilayaraja

மதியம் தம்பி Devinth SJ ஃபோன் செய்தார். சொந்த அலுவல்கள் காரணமாக ஒரு வாரமாக முகநூல் பக்கம் வர இயலவில்லை. மாலையில்தான் வீடியோ பார்க்கமுடிந்தது. கூடவே கண்டனப் பதிவுகளும் மற்றும் வழக்கம்போல அட்வைஸுகளும். வீடியோவைப் பார்த்தவரையில் இசைஞானி 96 படம்பார்க்கவில்லை. கோவிந்த் ஒரு அற்புதமான வயலினிஸ்ட். அழகாக இசையமைத்திருந்தார். இசைஞானியின் பாடல்களைத் தகுந்த இடங்களில் நாயகி பாடுவதுபோலக் காட்சியமைத்திருந்தார் இயக்குனர். உண்மையே! ‘ஆண்மையில்லாதவர்கள் செய்கின்ற வேலை’ என்பதை அவர் சொன்ன Context சொந்தமாக இசையமைக்க முடியாதவர்கள் Weakness.. என்ற பொருளில்தான் என்றாலும் தவிர்த்திருக்கக்கூடியதே என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கடந்த ½ மணிநேரமாக டைம்லைனை ஸ்க்ரோலியவகையில் ரஹ்மான் ரசிகர்கள் அறச்சீற்றம் கொண்டு குறுக்கால விழுந்து ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு கண்கள் பனித்தன.

நிற்க! ’காற்றுவெளியிடை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு.. ரஹ்மானிடம் கேள்விகேட்கப்படுகிறது. ‘மேடையில் தங்கள் பாடல்களை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்று சில இசையமைப்பாளர்கள் சொல்கிறார்களே? அதுபோல நீங்கள் எதுவும் சொல்வீர்களா?” என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு, “I don’t know what it is .. but.. everyone is free to sing my songs. I wouldn’t say no. there will be a legal team that will say …”. அதாவது ‘என் பாடல்களை நீங்கள் தாராளமாகப் பாடிக்கொள்ளலாம். நான் வேண்டாம் என்று சொல்லமாட்டேன். அப்படி வேண்டாம் என்று சொல்வதானால் அதை என் வக்கீல்கள் சொல்வார்கள்’ என்கிறார். எவனாச்சும் ராஜா ரசிகன் அதைப் பார்த்துட்டு, “கொய்யால.. இதத்தானேடா அவரும் சொன்னாரு? அதுக்கு பத்து நாள் பொங்க வச்சீங்க?” அப்டின்னு கேட்ருப்பானா? எனக்குத் தெரிஞ்சு யாரும் அப்படி செய்யல. ஒரு விஷயத்தை இசைஞானி இயல்பான மொழியில் சொன்னால், ”அவர் அப்படிப் பேசியிருக்கக்கூடாது.. இவ்வாறு பேசி தன் மதிப்பைக் குறைத்துக்கொள்கிறார்” என்று அட்வைஸ் செய்யும் ரஹ்மான் ரசிகர்கள் அதே விஷயத்தை ரஹ்மான் தேனொழுக ஆங்கிலத்தில் அனத்தும்போது ஆஃப்லைன் சென்றுவிடுகின்றனர்.

ilayaraja and ar rahman

#இளையராஜா75 தமுக்கத்தில் அரங்கேறியது. மேடையேறினார் ரஹ்மான். உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு Moment.! ‘இவர் வாழ்க்கை முறை என்னை ரொம்ப Inspire பண்ணிருக்கு. ஒரு இசைக்கலைஞன்னா கெட்டபழக்கங்கள் இருக்கணும்…. அப்படியெல்லாம் இவர் இல்லை. அது என்னை ரொம்ப ஆழமா பாதிச்சுது.. இதுமாதிரியும் இருக்கலாம்.. முன்னுக்கு வரலாம்..” அப்டின்றதை நான் இவர்கிட்ட கத்துகிட்டேன் என்கிறார் ரஹ்மான். பதிலுக்கு, ‘என்கிட்ட இருக்கிற கெட்டபழக்கம் எல்லாம் உனக்குத் தெரியாது” என்று கூறி சிரிக்கிறார் இசைஞானி. உடனே ’எங்க ரெண்டு பேருக்குமே ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. அதுதான் இசை!” என்கிறார் ரஹ்மான். ’அது உனக்குப் பழக்கமா இருக்கு.. எனக்கு அதுதான் Life” என்று இசைஞானி பதிலளிக்க உரையாடல் தொடர்கிறது. ‘யோவ்.. இசை என்பது கெட்டபழக்கமாய்யா?’ என்ற பத்து ஸ்டேட்டஸ்கள் கொண்ட Content ரெடிமேடாகக் கிடைத்தும் இசைஞானி ரசிகர்கள் அதைக்கொண்டு கூடிக் கும்மியடிக்கவில்லை.

ஆதலால், புயல் வாயனுகளே… அட்வைஸ் ம….கள் செய்வதை கொஞ்சம் நிறுத்திக்கொண்டு, இசைஞானியிடம் மைக் சென்றவுடன் Content ஏதாவது சிக்குமா?’ என்று வாயைப் பிளந்துகொண்டு (மூக்கின் கீழ் இருக்கும் வாய்) ஸ்டேட்டஸ் தட்ட எத்தனிக்குமுன்னர் ‘கையில் மிதக்கும் கனவா நீ” “கொஞ்சம் நிலவு” ‘சுவாசமே’ என்று ரஹ்மான் பாடல்களைக் கேட்டுவிட்டு உறங்கச்செல்லுங்கள். பொழுதுவிடியும்போது மனுசனா மாறி துயிலெழும்புங்கள். குட்நைட்.

முகநூலில் …Andrew RS