கொத்து கொத்தாக மடியும் மக்கள்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்து  89ஆயிரத்தை கடந்தது!

 

கொத்து கொத்தாக மடியும் மக்கள்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்து  89ஆயிரத்தை கடந்தது!

அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ttt

இருப்பினும் மற்ற நாடுகளை விட  அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு  அதிகமாகவே  உள்ளது. இதுவரை அந்த நாட்டில்  8 லட்சத்து  89ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

tt

மேலும் 50, 177 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 81,792 பேர் குணமாகி  திரும்பியுள்ளனர்.  அமெரிக்காவில் ஒரே நாளில் 2,322 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது அங்குள்ள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.