கொத்தவரங்காய் மோர் குழம்பு

 

கொத்தவரங்காய் மோர் குழம்பு

தேவையான பொருட்கள் :
கொத்தவரங்காய் – 1/4 கிலோ 
கெட்டி மோர் – 2 கப்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன்

தேவையான பொருட்கள் :
கொத்தவரங்காய் – 1/4 கிலோ 
கெட்டி மோர் – 2 கப்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2  டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப 
கடுகு –  1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4  டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – 10 இலைகள்

buttermilk

செய்முறை :
கொத்தவரங்காயை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். இப்போது அவற்றை 2 அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். நறுக்கிய கொத்தவரங்காயுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, தனியா, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதினை வேக வைத்த கொத்தவரங்காயுடன் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.  அதன் பின் மோரை கொத்தவரங்காயுடன் கலந்து, நுரைக்க கொதித்ததும் இறக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக புளித்த மோரைப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். 
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து மோர் குழம்பில் சேர்க்கவும். சுவையான கொத்தவரங்காய் மோர் குழம்பு தயார்.