கொடைக்கானல் குறிஞ்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

கொடைக்கானல் குறிஞ்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கொடைக்கானல் குறிஞ்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் அமையப் பெற்றது மலைகளின் இளவரசி என்று அழைக்கபடும் கொடைக்கானல் ஆகும். எங்கும் மலைகளும் காடுகளும் பார்ப்போரை மனம் சிலிர்க்க வைக்கும் கோடைவாசஸ்தலமான கொடைக்கானல் விளங்குகின்றது.

kurinji

கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கொடைக்கானல் மலை பகுதியில் பிரசித்தி பெற்ற குறிஞ்சி மாரியம்மன் கோயில்அமைந்துள்ளது.

இக்கோயிலில் நேற்று முன்தினம் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம் மாலை முதற்கால பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 

maariyamman

இரண்டாம்கால பூஜை நேற்று காலை 6.30 மணியளவில் துவங்கியது. யாகசால பூஜைகள் அனைத்தும் முடிந்த பின் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீகணபதி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து குறிஞ்சி மாரியம்மன் கோயில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.