கொடைக்கானலில் மதுவிருந்துக்கு வந்த 234 பேர்! – வி.ஐ.பி-க்களின் மகன்களும் இருந்ததால் அதிர்ச்சி

 

கொடைக்கானலில் மதுவிருந்துக்கு வந்த 234 பேர்! – வி.ஐ.பி-க்களின் மகன்களும் இருந்ததால் அதிர்ச்சி

இவர்கள் எல்லோரும் யார், எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மூன்று பேரிடம் விசாரித்தபோது, ஆன்லைனில் நண்பர்களாகி ஒன்று சேர்ந்ததாகவும், அனைவரும் சந்திக்கத் திட்டமிட்டு குண்டு பட்டியைத் தேர்வு செய்ததாகவும், சட்டவிரோத காரியம் எதிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானலில் மதுவிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 234 பேரை போலீசார் பிடித்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.

கொடைக்கானலில் மது விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பங்கேற்க 250க்கும் மேற்பட்டோர் வந்துள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மூன்று டி.எஸ்.பி-க்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குண்டுபட்டி என்ற இடத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில் திடீரென்று நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அங்கு மது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 234 பேரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். இவர்கள் எல்லோரும் யார், எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மூன்று பேரிடம் விசாரித்தபோது, ஆன்லைனில் நண்பர்களாகி ஒன்று சேர்ந்ததாகவும், அனைவரும் சந்திக்கத் திட்டமிட்டு குண்டு பட்டியைத் தேர்வு செய்ததாகவும், சட்டவிரோத காரியம் எதிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டிலிருந்து மூன்று பேரும் பங்கேற்க வந்தது தெரியவந்தது.

drink party

அவர்கள் தங்கியிருந்த விடுதியில் சோதனையிட்டபோது ஏராளமான மது பாட்டல்கள் மற்றும் போதைப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் வி.ஐ.பி-க்கள் வீட்டுப் பிள்ளைகளாகவும் கல்லூரி மாணவர்களாகவும் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உரிய அனுமதி இன்றி இதுபோன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யக்கூடாது என்று எச்சரித்து அவர்களை போலீசார் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மூன்று பேரிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.