கொடைக்கானலில் சுற்றுலா தளங்கள் திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

 

கொடைக்கானலில் சுற்றுலா தளங்கள் திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

தமிழகத்தில் பருவமழை கடந்த 17 ஆம் தேதி தொடங்கியதையடுத்து மழை ஆங்காங்கே வெளுத்து வாங்குகிறது.

தமிழகத்தில் பருவமழை கடந்த 17 ஆம் தேதி தொடங்கியதையடுத்து மழை ஆங்காங்கே வெளுத்து வாங்குகிறது. தென் மேற்கு வங்கக்கடல், மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் கடந்த 22 ஆம் தேதி (நேற்று) தமிழகத்தில் உள்ள கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ விடுத்தது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் 22 மற்றும் 23 ஆம் தேதி மூடப்போவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. 

Kodaikanal

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு விடுத்த ‘ரெட் அலெர்ட்’ ஐ திரும்பப்பெற்றதால் 23 ஆம் தேதி, அதாவது இன்று அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.