கொடுமை செய்த தந்தை..வீடியோ எடுத்துப் பிடித்துக்கொடுத்த மகள்!

 

கொடுமை செய்த தந்தை..வீடியோ எடுத்துப் பிடித்துக்கொடுத்த மகள்!

அமெரிக்காவில் பல ஆண்டுகளாக தன்னை கொடுமை செய்து வந்த தந்தையை விடியோ எடுத்து போலீசில் பிடித்துக்கொடுத்த மகளின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

video

அமெரிக்காவின் ஃபுளோரிடாவைச் சேர்ந்தவர் டாமோன் பெக்னெல் (47). கொடுமைக்கார கணவன் என்பதால் இவரிடமிருந்து விவாகரத்து பெற்று மனைவி பிரிந்துவிட்டார். இவர்களின் ஒரே மகளை வளர்க்கும் பொறுப்பு டாமோனுக்கு வந்தது. வேண்டா வெறுப்பாக மகளை வளர்த்துவந்தார். இந்த நிலையில், தன்னை அடித்து கொடுமை செய்வதாக இவரது 14 வயது மகள் பல முறை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் மற்றும் போலிசில் புகார் செய்துள்ளார். ஆனால், சின்ன பெண் தந்தை கண்டித்ததை எல்லாம் தவறாக சொல்கிறார் என்று நினைத்து புத்திமதி கூறினர்.

poilce

தந்தை தன்னை கொடுமை செய்யும் சம்பவத்தை வீடியோவாக எடுத்துக் கொடுத்தால் நம்புவார்கள் என்று திட்டமிட்ட அந்த சிறுமி, வீட்டில் வீடியோ கேமராவை பொருத்தினார். இது தெரியாத டாமோன், சிறுமியை கீழே தள்ளி அடித்துள்ளார். மேலும், நாயின் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

arrested

அடுத்த நாள் இந்த வீடியோவை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையம் சென்ற அந்த சிறுமி, தந்தை மீது புகார் அளித்து ஆதாரமாக வீடியோவையும் கொடுத்தார். வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர். அவர் மீது, சிறுமியை கொடுமை செய்தது மற்றும் நாயைக் கொடுமை செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.