கொடுமுடி நீர்தேக்கத்திலிருந்து நீர் திறந்து விட முதல்வர் உத்தரவு!

 

கொடுமுடி  நீர்தேக்கத்திலிருந்து நீர் திறந்து விட முதல்வர் உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும்

திருநெல்வேலி : கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

edappadi

திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து ஆகஸ்ட் 30 முதல் நவம்பர் 30-ம் தேதி வரை பாசன சாகுபடிக்காக நீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டார். இதுதவிர விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். 

kodumudi

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் நீரால், நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களில்  விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.