கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: பொன்.ராதாகிருஷ்ணன்

 

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: பொன்.ராதாகிருஷ்ணன்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறி வருவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறி வருவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது, எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ச்சியாக அங்கு பல மர்ம மரணங்கள்  நிகழ்ந்தன. 

இதனையடுத்து கொடநாடு கொள்ளை சம்பவத்தின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சயான் என்பவர், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாம் மேத்யூஸ் என்பவரிடம் அளித்த வீடியோ வாக்குமூலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாகக் கூறியிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முதல்வர் உட்பட அதிமுகவினர் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர் என்றார்.