கொடநாடு கொலை வழக்கு: சயன், மனோஜ் இருவரும் கைது!

 

கொடநாடு கொலை வழக்கு: சயன், மனோஜ் இருவரும் கைது!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  எதிராக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சயன், மனோஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  எதிராக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சயன், மனோஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

KODANADU

இந்த மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம் வழக்கின் முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மேத்யூ, சயான், மனோஜ் ஆகியோரைக் கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படை எஸ்பி செந்தில் குமார் தலைமையில் டெல்லி சென்றது.

இந்நிலையில், கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்து போலீசார் சென்னை அழைத்து வந்தனர். மேத்யூஸை தமிழக போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. சயன், மனோஜ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.