கொடநாடு கொலைவழக்கு : முக்கிய சாட்சி எங்கே ? திகைப்பில் போலீஸ்!!

 

கொடநாடு கொலைவழக்கு : முக்கிய சாட்சி எங்கே ? திகைப்பில் போலீஸ்!!

ஒரு காலத்தில் யாரும் நுழைய முடியாத ராணுவத் தலைமையகம் போல இருந்த இடம் ஜெயலலிதாவின் மலைவாச ஸ்தலமான கொடநாடு எஸ்டேட்.ஜெயலலிதா இறந்து,சசிகலா சிறைக்குப் போன பிறகு 2017 ஏப்ரல் 23 ம்தேதி இரவு 11 பேர் கொண்ட மர்ம கும்பல் அதற்குள் நுழைந்து ஒரு காவலாளியைக் கொன்று உள்ளே புகுந்து கைக்கு கிடைத்ததை அள்ளிப் போன செய்தி வந்தபோது தமிழகமே அதிர்ந்தது.

murder

அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மரணம்,ஜெயலலிதாவின் டிரைவர் மரணம் என்று தொடர்ந்து வந்த செய்திகளால் மர்மம் அதிகரித்துக்கொண்டே போனது. தொடர்ந்து அவரது சிறுதாவூர் பங்களாவில் தீ பிடித்தபோது தமிழகத்தின் பல பிரமுகர்கள் குறித்து பயங்கர வதந்திகள் பரவ ஆரம்பித்தன,அவை கடந்த இரண்டரை வருடங்களில் கொஞ்சம் மறக்கப்பட்ட நிலையில் அடுத்த அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது.

அந்த கொள்ளை நடந்த இரவில் ஓம் பகதூர் என்கிற காவலாளி கொல்லப்பட்டார்.மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் தேபாவும் கடுமையாக தாக்கப்பட்டார்.இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி வடமலை விசாரித்து வருகிறார். இப்போது வழக்கின் சாட்சிகள் விசாரணை துவங்க இருக்கிறது. 

court

அந்தக் கொள்ளைச் சம்பவத்தின் போது தாக்குதலுக்கு ஆளான கிருஷ்ண பகதூர் வழக்கின் மிக முக்கியமான ஒரே ஒரு சாட்சி.ஆனால்,அவர் இப்போது கொடநாட்டில் இல்லை.தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களிலேயே அவர் எஸ்டேட்டை விட்டு வெளியேறி விட்டாராம்.அதனால் தமிழக போலீசார் நேபாளத்தில் இருக்கும் கிருஷ்ண பகதூரின் ஊருக்கு தேடிப்போனபோது அவர் அங்கே இல்லை.தொடர்ந்து கிருஷ்ண பகதூரின் உறவினர்களிடம் விசாரித்தபோதுதான் அவர் அங்கே வரவே இல்லை என்கிற அதிர்ச்சி தகவல் கிடைத்து இருக்கிறது

poice

.

கிருஷ்ண பகதூர் தேபா எங்கே?.அவர் வேறு ஏதாவது மாநிலத்தில் வேலை பார்க்கிறாரா?.அல்லது,இந்த வில்லங்க வழக்கில் சாட்சி சொல்ல பயந்து தலைமறைவு ஆகிவிட்டாரா… குற்றவாளிகளால் விலைக்கு 
வாங்கப்பட்டு விட்டாரா,அல்லது,அவரை யாராவது சாட்சி சொல்ல விடாமல் தடுத்து வைத்து இருக்கிறார்களா.உயிரோடாவது இருக்கிறாரா என்று ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்கிறது காவல் துறை.ஆக,கொடநாடு மர்மங்கள் இப்போதைக்கு விலகாது என்று மட்டும் தெரிகிறது.