கொச்சி வந்த ஜெர்மன் பெண் காணாமல் போனாரா? ஒளிந்துகொண்டுள்ளாரா?

 

கொச்சி வந்த ஜெர்மன் பெண் காணாமல் போனாரா? ஒளிந்துகொண்டுள்ளாரா?

சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போலும் லிசா காணாமல் போன வழக்கை விசாரித்து, லுக் அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி, கேரளா வலியத்துறா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும். தக்க சன்மானம் குறித்த அறிவிப்பு ஏதுமில்லை.

சரியாக நான்கு மாதங்களுக்கு முன்பு ஜெர்மனியைச் சேர்ந்த லிசா வெய்ஸ் திருவனந்தபுரம் வந்திறங்கி இருக்கிறார். விமான நிலையத்தில் இருந்து  கொல்லம் பக்கத்தில் இருக்கும் ஆசிரமத்திற்கு போவதற்காக டாக்சி பிடித்திருக்கிறார். அதுதான் அவரைப்பற்றி தெரியவந்திருக்கும் கடைசி தகவல். நான்கு மாதங்கள் ஓடிவிட்டது. இந்தியாவில்தான் இன்னமும் இருக்கிறாரா, பத்திரமாக இருக்கிறாரா, இருக்கிறாரா என ஏகப்பட்ட கேள்விகள். விசா காலம் முடிந்தும் ஜெர்மன் திரும்பாத காரணத்தால், விசாரணையை தீவிரப்படுத்திய ஜெர்மன் அரசாங்கம், முகம்மது அலி என்பவருடன் கேரளா வந்திறங்கியதுடன் தகவல்கள் முற்றுப்பெறுவதை புரிந்துகொண்டது.

Lisa Wiese

இப்போது முகம்மது அலியைப் பற்றியும் சேர்த்து விசாரிக்கவேண்டிய சூழலில், பல ஆண்டுகளுக்கு முன்னரே லிசா மதம் மாறிவிட்டதாகவும், தீவிரவாத குழுக்களுடன் அவருக்கு தொடர்பு இருந்திருக்கலாம்/இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போலும் லிசா காணாமல் போன வழக்கை விசாரித்து, லுக் அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி, கேரளா வலியத்துறா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும். தக்க சன்மானம் குறித்த அறிவிப்பு ஏதுமில்லை.