கொங்கு மண்டலம் தி.மு.க-வுக்கு கைகொடுக்காதது ஏன்? – பிரஷாந்த் கிஷோரால் கலக்கத்தில் தலைவர்கள்! 

கொங்கு மண்டலம் தி.மு.க-வுக்கு கைகொடுக்காதது ஏன்? – பிரஷாந்த் கிஷோரால் கலக்கத்தில் தலைவர்கள்! 

பிரஷாந்த் கிஷோர் வந்து ஐ.டி விங் வேலையை செய்வார் என்று நினைத்துக் கொண்டிருந்த தி.மு.க-வினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது ஐபேக். இதனால் ஒரு சிலருக்கு அதிர்ச்சி என்றாலும் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுநாள் வரை செய்யத் தவறியதை பிரஷாந்த் கிஷோர் செய்து வருகிறார் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அப்படி என்ன செய்கிறார் என்று தி.மு.க பிரமுகர்களிடம் விசாரித்தோம்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வின் வியூக அமைப்பாளராக பிரஷாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். தி.மு.க-வின் ஐ.டி-விங் உள்ளிட்ட எந்த ஒரு பிரிவையும் அணுகாமல் களத்தில் இறங்கி வேலை செய்து வருவதால் தி.மு.க-வினர் கலக்கத்தில் உள்ளனர்.
பிரஷாந்த் கிஷோர் வந்து ஐ.டி விங் வேலையை செய்வார் என்று நினைத்துக் கொண்டிருந்த தி.மு.க-வினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது ஐபேக். இதனால் ஒரு சிலருக்கு அதிர்ச்சி என்றாலும் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுநாள் வரை செய்யத் தவறியதை பிரஷாந்த் கிஷோர் செய்து வருகிறார் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அப்படி என்ன செய்கிறார் என்று தி.மு.க பிரமுகர்களிடம் விசாரித்தோம்.

prasanth-kishor-dmk

பிரஷாந்த் கிஷோர் தி.மு.க-வின் பிளஸ், மைனஸ் என்று ஒரு பட்டியலைத் தயாரித்துள்ளார். பிளஸ் என்று வந்த விஷயங்களைக் கண்டுகொள்ளவில்லை. மைனஸ் என்று வந்த விஷயங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 90க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது… ஆனால் தி.மு.க-வை கவிழ்த்தது கொங்கு மண்டலம்தான். எனவே கொங்கு மண்டலத்தில் ஐபேக் குழுவினர் களமிறங்கி எதனால் தோல்வி என்று அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

prashant-kishor-09

அங்குள்ள சாதி அமைப்பு, தலைவர்களின் பங்களிப்பு, மக்களின் எதிர்பார்ப்பு என்று பல விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் வீக்காக உள்ள கொங்கு மண்டலத்தை எப்படி வலுப்படுத்துவது என்றும் ஆய்வு நடந்து வருகிறதாம். 
இதே போல் தி.மு.க வீக் என்று குறிப்பிடும் விஷயங்களில் எல்லாம் ஆய்வுகள் நடந்து வருகிறதாம். என்ன செய்ய வேண்டும் என்று அவர் கொடுக்கப்போகும் அறிக்கையை அப்படியே செயல்படுத்த உள்ளாராம் ஸ்டாலின்.

erode-dmk

இதனால், இதுநாள் வரை கட்சிக்காக உழைக்காமல் தங்கள் முன்னேற்றத்துக்காக மட்டும் பணியாற்றி வந்தவர்களுக்கு கல்தா கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.  ஐபேக் டீமின் அதிரடியால் தி.மு.க பெருந்தலைகள் ஆடிப்போய் உள்ளார்களாம்!