கை கொடுப்பதை விடக் கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் வைப்பதே நல்லது – நடிகர் வடிவேலு

 

கை கொடுப்பதை விடக் கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் வைப்பதே நல்லது –  நடிகர் வடிவேலு

கொரோனா வைரஸ் தாக்குதல் 100 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள நிலையில், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

கொரோனா வைரஸ் தாக்குதல் 100 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள நிலையில், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இன்றைய நிலவரத்தின் படி 72 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி உள்ளது. அதனால் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பெயரைக் கேட்டாலே மக்கள் பீதி அடையும் நிலையில், அதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் மக்கள் கொரோனாவை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

ttn

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, “கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை நான் ‘ஐயா’ படத்திலேயே ஏற்படுத்தி விட்டேன். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எந்த நோயும் வராது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு, அடுத்தவர்களுக்கு கை கொடுப்பதை விடக் கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் வைப்பதே நல்லது” என்று கூறினார்.