கை குழந்தையுடன் விஜய் டிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா… வனிதாவின் அட்வைஸ்: வைரல் வீடியோ!

 

கை குழந்தையுடன் விஜய் டிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா… வனிதாவின் அட்வைஸ்: வைரல் வீடியோ!

குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்துள்ள அவர் குழந்தையின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.  

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டான்ட் அப் காமெடியனாக கலக்கியவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

 

இவருக்கு ரியாஸ் என்ற கணவரும் ஒரு மகனும்  இருக்கும் நிலையில் நிஷாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்துள்ள அவர் குழந்தையின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.  

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வரும் இவர் குழந்தை பிறந்ததால் சில வாரங்களாக வரவில்லை. தற்போது  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் நிஷா.

இந்நிலையில் நிஷா தனது குழந்தை மற்றும் கணவருடன் இணைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள வனிதா உள்ளிட்ட சிலர் குழந்தையை கொஞ்சி மகிழ்கின்றனர். வனிதா கொஞ்சம் கூடுதலாக குழந்தைக்கு லோஷன் போடாத, க்ரீம் போடு என்று அட்வைஸை அக்கறையோடு சொல்லி கொண்டிருக்கிறார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.