கை குலுக்க வேண்டாம்… நமஸ்தே சொன்னால் போதும்! – கொரோனா பீதியால் உத்தரவிட்ட துணை முதல்வர்

 

கை குலுக்க வேண்டாம்… நமஸ்தே சொன்னால் போதும்! – கொரோனா பீதியால் உத்தரவிட்ட துணை முதல்வர்

கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் கை குலுக்குவதை நிறுத்திவிட்டு, கைகூப்பி நமஸ்தே சொல்ல வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.

ajit-pawar-90

கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது கைகளை சுத்தம் செய்துகொள்ளும்படியும், சுகாதாரமாக இருக்கும்படியும் கூறி வருகின்றன.
இந்த நிலையில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், பொது மக்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

handshake

“எனக்கு தூய்மை பிடிக்கும். அழுக்கு பிடிக்காது. தற்போது யாராவது கைகுலுக்க வந்தால் நான் வணக்கம் (நமஸ்தே) தெரிவிப்பதை நீங்கள்  பார்த்திருக்கலாம். நான் துணை முதல்வர் ஆகிவிட்டதால் இப்போது நான் கைகுலுக்கவில்லை என்று நினைக்கலாம். ஆனால் அது அப்படி இல்லை. கொரோனா வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த சுகாதார நெருக்கடி நீங்கும் வரை கைகுலுக்காமல் நமஸ்தே சொல்வது அனைவருக்கும் நல்லது” என்றார்.