கை, கால்களை கட்டி 150 இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா! 

கை, கால்களை கட்டி 150 இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா! 

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற, 150 இந்தியர்களின் கை மற்றும் கால்களை கட்டி வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற, 150 இந்தியர்களின் கை மற்றும் கால்களை கட்டி வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். இதையடுத்து, அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா முறைகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் இருந்து, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவது தடுக்கப்பட்டு வருகிறது.

indians

இந்நிலையில்  அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற 150 இந்தியர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இருந்துவிமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். வங்கதேசம் வழியாக, டெல்லி விமான நிலையத்துக்கு, 150 பேரும் நேற்று வந்து சேர்ந்தனர்.  அவர்களின் கை மற்றும் கால்கள் டெல்லி விமான நிலையம் வரும்வரை கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று கடந்த மாதமும் 300 இந்தியர்கள் திருப்பி அனுப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.