கைவிடப்பட்டது சிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படம்!?

 

கைவிடப்பட்டது சிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படம்!?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் sk 17  படத்தில் நடிக்கவுள்ளதாகச் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு வந்ததோடு சரி படம் குறித்த மற்ற அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. 

இந்தநிலையில் இந்த படம் கைவிடப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து நெருங்கிய வாட்டாரத்தில் விசாரித்த போது, லைக்கா நிறுவனம் 2.0, இந்தியன் 2 போன்ற பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துவிட்டதால் இனிமேல் பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோர்களாம். 

sk 17

அதனால் விக்னேஷ் சிவனிடம் இந்த படத்தின் பட்ஜெட் குறைத்துக்கொள்ளும் படி கூறினார்களாம். ஆனால் அவர் விடப்புடியாக பட்ஜெட்டை குறைக்க முடியாது என்ற சொன்னதால் லைக்கா இந்த படத்தை தயாரிக்கும் எண்ணத்தைக் கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.