கைலாசா போகிறேன் என்று கைலாசம் சென்ற நித்தியின் சீடர்! உடலை அவசரமாக எரித்த ஆசிரம நிர்வாகி

 

கைலாசா போகிறேன் என்று கைலாசம் சென்ற நித்தியின் சீடர்! உடலை அவசரமாக எரித்த ஆசிரம நிர்வாகி

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்குச் செல்கிறேன் என்று கூறி சென்ற பக்தர் ஒருவர் நேபாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்குச் செல்கிறேன் என்று கூறி சென்ற பக்தர் ஒருவர் நேபாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ashram

சிறுமிகள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக நித்தியானந்தா உள்ளார். இவர் கைலாசா என்று தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். பல லட்சம் பேர் இந்த நாட்டில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறினார். மேலும், இந்த நாட்டில் பாலியல் ரீதியான பாகுபாடு இல்லை, எந்த ஒரு பாலியல் நடவடிக்கைக்கும் தடையில்லை என்று கூறப்பட்டதால் பலரும் கைலாசா பற்றி பரபரப்பாக பேசினர். அந்த நாட்டுக்கு தன்னை பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று பிரபல சினிமா நடிகர் கூட வீடியோ வெளியிட்டார்.
தனி நாடு தொடங்கினார் என்று வெளியான செய்தி வெறும் கதைதான். அப்படி ஒரு நாட்டை நித்தியானந்தாவால் அறிவிக்க முடியாது என்று செய்திகள் வெளியாகவே, நாடு கடந்த கைலாசா என்று மாற்றினார் நித்தியானந்தா. ஆனாலும், கைலாசா நாட்டுக்கு செல்லும் ஆசை பலருக்கும் உள்ளது

ashram

. குஜராத் ஆசிரமத்திலிருந்த நித்தியானந்தாவின் சீடர் சதீஷ் செல்வகுமார் என்கிற ஶ்ரீ ஈஸ்வர பிரியானந்தாவுக்கும் கைலாசா செல்ல வேண்டும் என்ற ஆசை வந்தது. அவரும் நித்தியானந்தா போல, நேபாளம் சென்று அங்கிருந்து கைலாசம் செல்ல திட்டமிட்டார். குஜராத் ஆசிரமத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு சதீஷ் செல்வகுமார் மாயமானதாக கூறப்படுகிறது. அவரை அவரது பெற்றோர் தேடி வந்தனர். இதனால் அவரும் நித்தியானந்தாவுடன் கைலாசாவில் இருக்கலாம் என்று கருதப்பட்டது.

nephal

இந்த நிலையில் இந்தியா – நேபாளம் எல்லையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரித்ததில் அது நித்தியானந்தாவின் சீடர் சதீஷ் உடல் என்பது தெரியவந்தது. இது குறித்து வாரணாசியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தனர். அவர்கள் அது சதீஷ் செல்வகுமாரின் உடல்தான் என்று கூறி அதைப் பெற்று அதற்கு இறுதிச் சடங்கு நடத்தி எரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  
தங்கள் மகன் எங்கே என்று தொடர்ந்து கேட்டபோதும் பதில் சொல்லாத ஆசிரம நிர்வாகிகள், தற்போது உங்கள் மகன் இறந்துவிட்டான். அவருக்கு ஜனவரி 18ம் தேதி காரியம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளுங்கள் என்று சதீஷின் அம்மா வனஜாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், சதீஷின் அம்மா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சதீஷ் சாவில் மர்மம் உள்ளது என்றும், தங்களுக்குத் தெரிவிக்காமல் உடல் எரிக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்றும் சதீஷின் அம்மா வனஜா புகார் தெரிவித்துள்ளார். ஆனாலும் காவல் துறை தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதுதான் தெரியவில்லை.