‘கைலாசா’ தனிநாடு கனவு டுமீல் ; இமயமலையில் நித்தியானந்தா… சுற்றி வளைக்க போலீஸ் திட்டம்?!

 

‘கைலாசா’ தனிநாடு கனவு டுமீல் ; இமயமலையில் நித்தியானந்தா… சுற்றி வளைக்க போலீஸ் திட்டம்?!

இதனிடையே  நித்தியானந்தாவின் கைலாசா நாட்டில் குடியுரிமை  வாங்கிவிட வேண்டும்

நித்தியானந்தா மீது ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் பாய்ந்துள்ளது. அதேசமயம் குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. மேலும் ஆசிரமத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதுவொருபுறமிருக்கத் தனிநாடு அமைக்க வேண்டும் என்ற நித்தியானந்தா அதை செயல்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாகத் தனிநாடு முயற்சியை மேற்கொண்டு வரும் நித்தி தென்அமெரிக்க நாட்டில் உள்ள தீவை விலைக்கு வாங்கியுள்ளார் என்று கூறப்பட்டது.

nithi

இதுகுறித்து  வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ள அவர், அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளதாகவும்  இந்து மதத்தைப் பின்பற்றும்  யார் வேண்டுமானாலும்  கைலாசா  நாட்டின் குடியுரிமையை பெறலாம் என்றும்  கூறியுள்ளார். கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடிப் பேர். இதற்கு பாஸ்போர்ட், மொழி, இணையதளம்  உள்ளிட்டவற்றையும் அவர் வெளியிட்டிருந்தார். 

nithi

இந்நிலையில்   நித்தியானந்தா  இமயமலையில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தா இமயமலை பகுதியில் பேசிய  வீடியோக்கள் தான், பிடதி ஆசிரமத்திலிருந்து பதிவேற்றம் செய்யப்படுவதாகத் தெரிகிறது. 

nithi

ஏற்கனவே நித்தியின்  பாஸ்போர்ட் முடக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்  தரை வழியாக நேபாளம் சென்று இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது அவர் இமயமலையில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளதால் அவர் விரைவில் போலீசாரால் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  நித்தியானந்தாவின் கைலாசா நாட்டில் குடியுரிமை  வாங்கிவிட வேண்டும் என்று சோஷியல் மீடியாக்களில் கனவு கண்டவர்களின் நிலையோ அன்றோ பரிதாபம் தான். ..!