கையை விரித்த ரிசர்வ் வங்கி….. வீடு, வாகன கடனுக்கான வட்டி தற்சமயம் குறையவாய்ப்பில்லை….

 

கையை விரித்த ரிசர்வ் வங்கி…..  வீடு, வாகன கடனுக்கான வட்டி தற்சமயம் குறையவாய்ப்பில்லை….

ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையில் ரெப்போ ரேட்டில் எந்தவித மாற்றமும் செய்யாததால், தற்சமயம் வீடு மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதம் குறையவாய்ப்பில்லை.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்தான் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்வது குறித்து முடிவு எடுக்கும். கடந்த ஆண்டில் தொடர்ந்து 5 முறை ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி குறைத்தது.  இந்நிலையில் கடந்த டிசம்பரில் முக்கிய கடனுக்கான வட்டி விகித்தில் எந்தவித மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. 

வீட்டு கடன்

கடந்த டிசம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டியது. மேலும் வரும் மாதங்களிலும் பணவீக்கம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டது. இதனால் பிப்ரவரி மாத நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிதியாண்டின் கடைசி மற்றும் ரிசர்வ் வங்கியின் 6வது நிதிக்கொள்கை கூட்டம் கடந்த 4ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது.

வட்டி விகிதம்
 
அனைவரும் எதிர்பார்த்தப்படியே ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் இன்று எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. இதனால் தற்சமயம் வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் குறையவாய்ப்பில்லை.