கையை மீறி சென்ற நிதிப்பற்றாக்குறை! விழிபிதுங்கும் பா.ஜ.க. அரசு…..

 

கையை மீறி சென்ற நிதிப்பற்றாக்குறை! விழிபிதுங்கும் பா.ஜ.க. அரசு…..

கடந்த அக்டோபர் வரையிலான 7 மாதத்தில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மத்திய பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கை காட்டிலும் அதிகரித்து விட்டது. இது மத்திய அரசுக்கு புது தலைவலியை உருவாக்கி உள்ளது.

மத்திய அரசின் மொத்த செலவுக்கும், வருவாய்க்கும் இடையிலான வித்தியாசம் நிதிப்பற்றாக்குறையாகும். மத்திய பட்ஜெட்டில் இந்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் அளவுக்கு வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது இந்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.7.03 கோடியை தாண்டக் கூடாது என மத்திய அரசு கட்டுப்பாட்டு இலக்கை நிர்ணயித்தது.

நிதிப்பற்றாக்குறை

ஆனால் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக உள்ளது. இந்த நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களிலே (ஏப்ரல்-அக்டோபர்) மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மத்திய பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கில் 102 சதவீதத்தை எட்டி விட்டது. கடந்த அக்டோபர் வரையிலான 7 மாதத்தில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.7.20 லட்சம் கோடியாக உள்ளது. 

நிதி

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மத்திய அரசுக்கு ரூ.9.07 லட்சம் கோடி மட்டுமே வருவாயாக வந்துள்ளது. அதேசமயம் ரூ.16.54 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. இதனையடுத்து ரூ.7.20 லட்சம் கோடி நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதியாண்டு முடிவடைய இன்னும் 5 மாதம் உள்ள நிலையில், நிதிப்பற்றாக்குறை இலக்கை காட்டிலும் அதிகரித்துள்ளது. நிதிப்பற்றாக்குறையை நிர்ணயித்த இலக்குக்குள் வைத்திருக்க வேண்டுமானால் செலவினங்களை சுருக்குவதோடு, வருவாயை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.