கையில காசே இல்ல! எங்க குடிக்கிறது… வெறிச்சோடிய மதுக்கடைகள்

கையில காசே இல்ல! எங்க குடிக்கிறது… வெறிச்சோடிய மதுக்கடைகள்

மே 16, 17 ஆகிய இரண்டு நாட்களிலும் மது விற்பனை சுமார் 300 கோடி ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று பெரும்பாலான மதுக்கடைகளில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டநிலையில், டோக்கன் எண்ணை ஒலிபெருக்கியில் அறிவித்து, மதுப்பிரியர்களை கூவி கூவி அழைக்கும் நிலை ஏற்பட்டது. மதுக்கடை திறந்த மூன்றாவது நாளிலேயே, மதுப்பிரியர்களின் வருகை குறைந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கியில் மதுவாங்க யாரும் வராததால் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி கிடந்தன.

tasmac

அறந்தாங்கி நகராட்சி பகுதியில் சுமார் 10 அரசு மதுபான கடைகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று முதல் நாளிலிருந்து கடைகள் திறக்கப்பட்டன. கடந்த இரண்டு தினங்களாக அனைத்து கடைகளிலும் பரவலாக விற்பனை நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் மதுவாங்க யாரும் வரவில்லை. ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன் வழங்க வேண்டிய நிலையில் ஒரு சில கடைகளில் 30 டோக்கன் மட்டுமே வழங்கியிருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் இன்று காலை முதல் மத்தியான 2 மணி வரை ஒருவர் கூட இன்னும் மது வாங்க வராததால் டாஸ்மாக் ஊழியர்களே திகைத்துபோயினர்.