கையில் ஸ்டிக்குடன் டிடி வெளியிட்ட புகைப்படம்: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

 

கையில் ஸ்டிக்குடன் டிடி வெளியிட்ட புகைப்படம்: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

கடந்த 20 வருடங்களாக சின்னதிரையில் வலம்  வரும் டிடி  வெள்ளிதிரையிலும் நடித்து வருகிறார்.

டிவி தொகுப்பாளினி டிடி இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

dd

பிரபல டிவி தொகுப்பாளினியாக வலம்வருபவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. கடந்த 20 வருடங்களாக சின்னதிரையில் வலம்  வரும் டிடி  வெள்ளிதிரையிலும் நடித்து வருகிறார். இதுதவிர பல்வேறு மேடை நிகழ்ச்சியில், விருது வழங்கும் விழா என படுபிஸியாக சுற்றிக்கொண்டிருக்கும் இவர் இணையத்திலும் படுஆக்ட்டிவாக செயல்பட்டு வருகிறார்.

 

இந்நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கையில் ஸ்டிக் ஊன்றிய படி போஸ்  கொடுத்துள்ளார். அதில் என் முழங்காலில் சிறிது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒருவாரத்தில் மீண்டு வருவேன். உங்கள் அன்புக்கு நன்றி என்றும் ஷூட்டிங்கில ஆட்டம் கொஞ்சம் ஓவரா போட்டோமோ.. என்றும் பதிவிட்டுள்ளார்.

dd

டிடியின் இந்த புகைப்படத்தைக் கண்ட அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறுவதோடு, விரைவில் குணமாக வாழ்த்து கூறியும் வருகின்றனர்.