“கைதி” இந்தி ரீமேக்…ஹீரோ இவரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

“கைதி” இந்தி ரீமேக்…ஹீரோ இவரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான  கைதி படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர்  மாதம் வெளியானது. ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில்  நரேன், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  

ttn

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கைதி  இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை  ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.

ttn

இப்படத்தில்  அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்டுகிறது.