கைதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் திருநள்ளாறு காவல் நிலையம் மூடல்!

 

கைதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் திருநள்ளாறு காவல் நிலையம் மூடல்!

கைதிக்கு கொரோனா வைரஸ் பரவியதால் காவல் நிலையம் மூடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7000ஐ கடந்துள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3800ஐ எட்டியுள்ளது. அதிவேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், கைதிக்கு கொரோனா வைரஸ் பரவியதால் காவல் நிலையம் மூடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

ttn

திருநள்ளாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுரக்குடியை சேர்ந்த வாகன் ஓட்டுநர் ஒருவர் தகராறு செய்ததால் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர. அதற்கு முன்பாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது  அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் வசித்து வந்த கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

அதே போல அவரை விசாரணை செய்ய திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டதால், அந்த காவல் நிலையத்தையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை அழைத்து வந்த காவலர்கள் அவருடன் பணியாற்றிய காவலர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.