கைதட்ட சொன்னவரும், விளக்கேற்ற சொன்னவரும் பம்மி கொண்டிருக்க… நாங்கள் ஒதுங்கினால் உங்க எல்லாருக்கும் சங்கு தான்! – மருத்துவர் ஷாலினி

 

கைதட்ட சொன்னவரும், விளக்கேற்ற சொன்னவரும் பம்மி கொண்டிருக்க… நாங்கள் ஒதுங்கினால் உங்க எல்லாருக்கும் சங்கு தான்! – மருத்துவர் ஷாலினி

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் கல்லறைத் தோட்டத்தில் நடந்தன. ஆனால் அந்த கல்லறையில் அடக்கம் செய்யக்கூடாது என அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், கொரோனா தொற்றால் சென்னையில் உயிரிழந்தார். அவரின் சடலத்தையும் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ttn

இந்நிலையில் மனநல மருத்துவர் ஷாலினி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் உயிர் தான் முக்கியம், என்று மருத்துவர் நாங்கள் அனைவருமே வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டில் அடைந்துக்கொண்டால் உங்களால் என்ன செய்ய முடியும்?

“அலொபதி டாக்டர்கள் தான் மோசமானவர்களாச்சே? போய் உங்க favourite ஆயுஷ் டாக்டரை பார்த்துக்கோங்க…” என்று நாங்கள் கைவிரித்து கதவை மூடினால் உங்கள் கதி என்ன?

கைதட்ட சொன்னவரும்,
விளக்கேற்ற சொன்னவரும்,
கசாயம் குடிக்க சொன்னவரும்,
அவரவர் வீட்டில் பம்மிக்கொண்டிருக்க
“அலோபதி டாக்டர்” தானே அசிங்கம் பார்க்காமல் உங்கள் நவதுவார கழிவுகளை எல்லாம் தொட்டு சரிசெய்தார்?

doctor shalini

சரி, அந்த நன்றி உணர்வு வேண்டாம்.  உங்களிடம் அவ்வளவெல்லாம் எதிர்பார்ப்பது கேனத்தனம்….

“இப்படி நாம் டாக்டர்களை கொடுமைபடுத்தினால், நாளைக்கு ஒட்டு மொத்த டாக்டர்களும் வேலைக்கு டிமிக்கி கொடுத்தால் நம்ம கதி என்ன?” என்கிற அடிப்படை சுயநல அறிவு வேண்டாம்?!

டாக்டர்னா அப்படியே சூடு சுரணை இல்லாமல், நீங்க என்ன ஏடாகூடம் பண்ணாலும் தியாகம் பண்ணுயே மண்டைய போடுற ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ கல்யாண்குமார்னு நினச்சீங்களா? 

“இனி எங்களால முடியாது, உங்க ஆளுங்கள வெச்சி பார்த்துக்க”நு சொன்ன டாக்டர் முத்துலஷ்மி வகையராக்கள் இருக்கிறோம்… ஜாக்கிரதை!

ஒழுங்காய் மனிதாபிமானத்தோடு நடந்தால் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு அறணாக நாங்கள் நிற்போம்.
எங்களையே டபாய்த்தால், “சீ போ” என்று நாங்கள் ஒதுங்கிக்கொள்வோம்.

அப்புறம் என்ன…. உங்க எல்லாருக்கும் சங்கு தான்.
சுடுகாடு தேடி போகவே வேண்டாம்.
நாடே சுடுகாடாகும்…..
இது தேவையா?” என பதிவிட்டுள்ளார்.