கைகுலுக்கல் இல்லை, கட்டிப்பிடித்தல் தவிர்ப்பு – கொரோனா வைரஸால் பீதியில் உலக நாடுகள்

 

கைகுலுக்கல் இல்லை, கட்டிப்பிடித்தல் தவிர்ப்பு – கொரோனா வைரஸால் பீதியில் உலக நாடுகள்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற நாகரீக செயல்களை கூட செய்ய வேண்டாம் என உலக நாடுகள் அறிவுறுத்தி உள்ளன.

பாரிஸ்: கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற நாகரீக செயல்களை கூட செய்ய வேண்டாம் என உலக நாடுகள் அறிவுறுத்தி உள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2943-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். அத்துடன் புதிதாக 125 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற நாகரீக செயல்களை கூட செய்ய வேண்டாம் என உலக நாடுகள் அறிவுறுத்தி உள்ளன. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த அறிவுரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சீனா, பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின், ரொமேனியா, போலந்து, ஈரான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு, அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மக்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளன.