கைகளில் ரத்தக்கறை…டாக்டர் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

 

கைகளில் ரத்தக்கறை…டாக்டர் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். 

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு  நம்ம வீட்டுப் பிள்ளை,  இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம் வெளியானது. இதை தொடர்ந்து  தற்போது ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.   கே.ஜி.ஆர் பிலிம்ஸ் நிறுவனம்,  சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா,  வினய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, ‘கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். 

 

ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என ஃபுல் எண்டர்டெயின்மெண்ட்டாக  உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு   கோவாவில் நடந்துமுடிந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று டாக்டர்  படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கைகளில் ரத்தக் கறை,  சுற்றிலும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட பொருட்கள் என நாற்காலியில் சிவகார்த்திகேயன் அமைந்திருக்கிறார். இதை அவரது ரசிகர்கள்  #DoctorFirstLook என்ற ஹேஸ்டேக்கையும்  டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக டாக்டர் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.