கே.டி.எம். டியூக் 790 பைக் வாங்க போறீங்களா? – ரூ.2 லட்சம் வரை ஆஃபர்

 

கே.டி.எம். டியூக் 790 பைக் வாங்க போறீங்களா? – ரூ.2 லட்சம் வரை ஆஃபர்

கே.டி.எம் 790 டியூக் பைக் வாங்குவோருக்கு ரூ.2 லட்சம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: கே.டி.எம் 790 டியூக் பைக் வாங்குவோருக்கு ரூ.2 லட்சம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.டி.எம் 790 டியூக் மாடல் பைக்கின் 100 யூனிட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள பஜாஜ் ஆலையில் பாகங்கள் ஒன்றிணைப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த பைக் இந்தியாவில் வெளியான பத்து நாட்களில் சுமார் 41 யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது. இந்தியாவில் பி.எஸ்.6 விதிகள் அமலாக 20 நாட்கள் மட்டுமே உள்ளன.

ttn

இந்த நிலையில், கே.டி.எம். டியூக் 790 பைக்கை வாங்குவோருக்கு ரூ.2 லட்சம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பி.எஸ்.4 ரக மாடல்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கே.டி.எம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 790 டியூக் பைக்கின் விலை ரூ.8.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியானது.