கே.சி.பழனிசாமியின் மனுவை அதிரடியாக நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்!

 

கே.சி.பழனிசாமியின் மனுவை அதிரடியாக நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்!

கே.சி.பழனிசாமியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: கே.சி.பழனிசாமியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு, அக்கட்சியின் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

இதனை எதிர்த்து அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றதில் மனுத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை தேர்தல் ஆணையமே விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.  

ஆனால், அதிமுக உறுப்பினராகவே இல்லாத பழனிசாமி தொடுத்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு அளித்தார்.

இந்நிலையில், அந்த மனுவை ஏற்றுக்கொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையம், கே.சி பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.