கே.எல்.ராகுலை காதலிக்கவில்லை ! நடிகை மீண்டும் திட்டவட்டம் !

 

கே.எல்.ராகுலை காதலிக்கவில்லை ! நடிகை மீண்டும் திட்டவட்டம் !

கே.எல்.ராகுலை காதலிக்கவில்லை என்றும், அவர் ஒருநல்ல நண்பர் என்றும் நடிகை நிதி அகர்வால் மீண்டும் தெரிவித்துள்ளார்.

கே.எல்.ராகுலை காதலிக்கவில்லை என்றும், அவர் ஒருநல்ல நண்பர் என்றும் நடிகை நிதி அகர்வால் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகின் கதாநாயகியான நிதி அகர்வாலும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுலும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அதற்குக் காரணம் இருவரும் ஒன்றாக இருப்பது போல் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள்தான்.

klrahul

இதுகுறித்து மீண்டும் விளக்கம் அளித்துள்ள நிதி அகர்வால் புகைப்படங்களுக்கான விளக்கமும் அளித்துள்ளார். உலக கோப்பை போட்டியின் போது தான் லண்டன் சென்றபோது அப்போதுதான் கே.எல்.ராகுலை முதல் முறையாக சந்தித்ததாக குறிப்பிட்டுள்ள நிதி அகர்வால் அப்போது முதல் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு நம் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தேன். வேறொன்றுமில்லை நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை என சமூகவலைதள வாசிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.