கே.என்.நேருவின் திருச்சி தி.மு.க மாவட்டம் மூன்றாக உடைந்தது!

 

கே.என்.நேருவின் திருச்சி தி.மு.க மாவட்டம் மூன்றாக உடைந்தது!

கே.என்.நேரு மாநில அளவிலான பதவிக்கு சென்றதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தை மூன்றாக உடைத்து மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தி.மு.க திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் கே.என்.நேரு. ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் திருச்சியில் செல்வாக்குமிக்கத் தலைவராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

கே.என்.நேரு மாநில அளவிலான பதவிக்கு சென்றதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தை மூன்றாக உடைத்து மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் கே.என்.நேரு. ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் திருச்சியில் செல்வாக்குமிக்கத் தலைவராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

stalin

இந்த நிலையில், அவருக்கு மாநில அளவிலான பதவியை தி.மு.க கொடுத்தது. டி.ஆர்.பாலு வகித்துவந்த தி.மு.க முதன்மை செயலாளர் பதவியில் நேரு அமர்த்தப்பட்டார்.
கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்ச முதல்கட்டமாக கே.என்.நேருவுக்கு உயர் பதவி கொடுக்கப்பட்டதாகவும் இளைஞர்கள் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. அதைப் போலவே, தி.மு.க-வின் திருச்சி வடக்கு, தெற்கு மாவட்டங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது. திருச்சி வடக்கு மாவட்டத்துக்கு காடுவெட்டி தியாகராஜனும், திருச்சி மத்திய மாவட்டத்துக்கு வைரமணியும், திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.