கோவிலில் எலுமிச்சம் பழம் வாங்கினால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

 

கோவிலில் எலுமிச்சம் பழம் வாங்கினால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

தமிழகத்தில் பல்வேறு வகையான கலாசாரங்களும், தெய்வ நம்பிக்கை பழக்க வழக்கங்களும் மாறு பட்டு இருக்கின்றது. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஏற்ப ஆலயங்களில் வழங்கப்பட்டும் பிரசாதங்களும், வழிபாட்டு முறைகளும் மாறுபட்டு இருக்கின்றது. அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு பிரசாதமாக எலுமிச்சம் பழத்தை கொடுப்பார்கள்.

தமிழகத்தில் பல்வேறு வகையான கலாசாரங்களும், தெய்வ நம்பிக்கை பழக்க வழக்கங்களும் மாறு பட்டு இருக்கின்றது. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஏற்ப ஆலயங்களில் வழங்கப்பட்டும் பிரசாதங்களும், வழிபாட்டு முறைகளும் மாறுபட்டு இருக்கின்றது. அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு பிரசாதமாக எலுமிச்சம் பழத்தை கொடுப்பார்கள். அந்த எலுமிச்சம் பழத்தை கடவுளின் அருள் பெற்றதாக கருதி அதை பெரியவர்கள் வீட்டில் வைத்துக் கொள்வார்கள். ஒரு சிலர் வாகனங்களில் வைத்தால் எந்த அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கும் என்ற நம்பிக்கையால் அவற்றை வாகனங்களில் வைப்பதும் உண்டு.

lemon

கோவிலில் வாங்கப்படும் எலுமிச்சம்பழத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே வைத்து வீண் அடிப்பார்களும் உண்டு. இப்பழத்தை வைத்து என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
கோயிலில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலுமிச்சம் பழத்தை வாங்கும் பொழுது அதை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதை சாறு பிழிந்து சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் உப்பு மட்டும் கலந்து குடிக்கக் கூடாது. கோவிலில் பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம் பழத்தை வைத்து கண்டிப்பாக திருஷ்டி சுத்தி போடக் கூடாது. வீட்டில் அல்லது கடைகளில் வாங்கிய எலுமிச்சை பழத்தை வைத்து திருஷ்டி சுத்திலாம். தவிர பிரசாதமாக வாங்கிய பழத்தை வைத்து திருஷ்டி சுத்தி போடக்கூடாது.

lemon

கோவிலில் வாங்கிய எலுமிச்சம் பழத்தை நமது வீட்டில் பூஜையறையில் வைத்து வழிபடுவது வீட்டிற்கு கடவுளின் அருள் பார்வை மற்றும் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும்.