கேஸ விட பீர் விலை கம்மிதான்… குடிங்க, ஆனா ஓட்டாதீங்க! இந்தியன் ஆயிலின் விளம்பரத்திற்கு எழும் விமர்சனங்கள்!

 

கேஸ விட பீர் விலை கம்மிதான்… குடிங்க, ஆனா ஓட்டாதீங்க! இந்தியன் ஆயிலின் விளம்பரத்திற்கு எழும் விமர்சனங்கள்!

சில நிறுவனங்கள் தங்களின் பிராண்டை மக்களிடம் எடுத்துச் செல்ல புத்திசாலித்தனமான விளம்பரங்களை வழங்குவர். சிலர் சமூக நல கருத்துக்களோடு தங்களின் பொருட்களையும்  சேர்த்து மார்க்கெட்டிங் செய்து கொள்வர். 

சில நிறுவனங்கள் தங்களின் பிராண்டை மக்களிடம் எடுத்துச் செல்ல புத்திசாலித்தனமான விளம்பரங்களை வழங்குவர். சிலர் சமூக நல கருத்துக்களோடு தங்களின் பொருட்களையும்  சேர்த்து மார்க்கெட்டிங் செய்து கொள்வர். 

இந்தியன் ஆயில் நிறுவனம் தனது விளம்பரமொன்றில் “கேஸை விட பீர் விலை கம்மி தான், குடிங்க. குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க” என்ற வாசகத்தை எழுதியிருந்தனர். 

drink and drive

இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட டெக்கான் ஹெரால்டின் எடிட்டர் சீதாராம் ஷங்கர் “எரிவாயுவை விட பீர் மலிவானது. குடிக்கவும், ஓட்ட வேண்டாம் ‘என்ற கருது  பல்வேறு நிலைகளில் சுவாரஸ்யமாக உள்ளது. மதுவிற்கு வித்தியாசமான முறையில் உள்ள ஒரு அறிவுரை; உங்கள் சொந்த தயாரிப்புகளின் விற்பனையை குறைக்கும் பொது நலனில் அக்கறை கொண்ட கருத்தைச் சொல்வது கூட அரிது. இதைக் கனவு கண்டவர் யார்?” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு கமெண்ட் செய்த ஒருவர் இது முற்றிலும் முட்டாள்த்தனமான விளம்பரம், இதை அங்கீகரித்தவரை இந்தியன் ஆயில் நிறுவனம் வேலையை விட்டே நீக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.