கேஸ் சிலிண்டர்கள் பதிவு செய்ய கட்டுப்பாடு.. ஊரடங்கில் அதிகமாக உபயோகிக்கப்படுவதால் நடவடிக்கை!

 

கேஸ் சிலிண்டர்கள் பதிவு செய்ய கட்டுப்பாடு.. ஊரடங்கில் அதிகமாக உபயோகிக்கப்படுவதால் நடவடிக்கை!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அதனால் சமையல், உணவு பண்டங்கள் செய்வது அதிகமாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கால் கேஸ் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் அதிகமாக சிலிண்டர்களை பதிவு செய்து வந்தனர். இதனால் கேஸ் தட்டுப்பாடு நிலவும் என கூறப்படுகிறது. 

ttn

எப்போது வேண்டுமானாலும் சிலிண்டர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்து வந்த நிலையில், தற்போது  தட்டுப்பாடு ஏற்படுவதை குறைப்பதற்காக சென்னையில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு கேஸ் ஏஜென்சியில் நாளொன்றுக்கு  400 முதல் 500 சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் படி தினமும் சென்னையில் 60-70 ஆயிரம் சிலிண்டர்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கேஸ் ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.