கேள்வி குறியாகும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு!- உச்சநீதிமன்றம் அதிருப்தி

கேள்வி குறியாகும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு!- உச்சநீதிமன்றம் அதிருப்தி

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக உரிய சட்டம் இயற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தமிழக காவல்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக உரிய சட்டம் இயற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தமிழக காவல்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குவைத்தில் வீட்டு வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஆயிஷா பானு, ஷர்மிளா, லிங்கமுத்து உள்ளிட்டோரை மீட்டுத்தரக்கோரி அவர்களின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், வீட்டு வேலைக்காக குவைத் சென்றவர்கள் சம்பளம், உணவு, அடிப்படை வசதியின்றி அடைத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து குவைத்திலுள்ள இந்திய தூதரகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என  குற்றஞ்சாட்டியுள்ளனர். பெண்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்லும் போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். 

abroad

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீமன்றத்தில்,  நீதிபதிகள் என்.வி. ரமணா, அஜய் ரஸ்தோஹி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாவதாக தெரிவித்தனர். மேலும் வெளிநாடுகளில் வேலைக்கு அழைத்து செல்லப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில்  பிலிப்பைன்ஸ், இலங்கை நாடுகளில் தனிச்சட்டம் இருப்பது போன்று இந்தியாவிலும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என கூறி மத்திய அரசு மற்றும் தமிழக டி.ஜி.பி. 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.