கேள்வித்தாள் தயாரிக்க மறந்த பல்கலைக்கழகம்.!? குழப்பத்தில் மாணவர்கள்..!

 

கேள்வித்தாள் தயாரிக்க மறந்த பல்கலைக்கழகம்.!? குழப்பத்தில் மாணவர்கள்..!

தில்கா மஞ்சிஹி பாகல்பூர் பல்கலைக் கழகத்தில் இந்தி மொழியில் முதுகலை பட்ட இரண்டாவது செமஸ்ட்டர் எழுத வந்த மாணவர்களுக்கு நடந்த இந்த சோகம் டி.எம்.பி.யு என்று அழைக்கப் படும் அந்தப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு சாதாரண சம்பவமாகவே தெரிகிறது.

இந்தியில் முதுகலைத் தேர்வுக்காக 94 மாணவர்கள் எக்ஸாம் ஹாலில் வந்து அமர்ந்த பிறகு,அந்த செமஸ்ட்டருக்கான கேள்வித்தாள் அச்சிடப்படவே இல்லை என்று சொல்லி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது ஒரு பீஹார் பல்கலைக் கழகம்.

tmbu

தில்கா மஞ்சிஹி பாகல்பூர் பல்கலைக் கழகத்தில் இந்தி மொழியில் முதுகலை பட்ட இரண்டாவது செமஸ்ட்டர் எழுத வந்த மாணவர்களுக்கு நடந்த இந்த சோகம் டி.எம்.பி.யு என்று அழைக்கப் படும் அந்தப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு சாதாரண சம்பவமாகவே தெரிகிறது. பல்கலை துணைவேந்தர் கண்ட்ரோலர் ஆஃப் எக்சாமினேஷன்,மற்றும் இந்தி துறைத் தலைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அந்த 94 மாணவர்களும் மறுபடி எப்போது தேர்வு நடக்கும் என்பதே தெரியாமல் வீடு திரும்பி இருக்கிறார்கள்.

tmbu-bhagalpur

இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி இந்தித்துறைத் தலைவர் அஷோக் தாகூர்,இந்த குழப்பத்துக்கு காரணம் புதிதாக அறிமுகமாகி இருக்கும் சி.பி.சி.எஸ் முறைதான் என்று சொல்வதாக கூறியிருக்கிறார். இதற்கு முன்பே விடைத்தாள்கள் பற்றாக்குறையால் பட்டப்படிப்பு மாணவர்களின் தேர்வு ஒரு வருடம் தள்ளிப் போயிருக்கிறது இந்தப் பல்கலையில்.

70000 மாணவர்கள் தேர்வு எழுதப் போவதால் 3.5 லட்சம் விடைத்தாள்கள் தேவைப்படும். அவற்றை அச்சிட தற்காலிக துணைவேந்தர் நிதி ஒதுக்கத் தவறியதால்,கடந்த ஆண்டுத் தேர்வின்போது மிச்சமான விடைத்தாள்களைக் கொடுத்து அதில் எழுதச் சொன்ன வரலாறெல்லாம் இந்தப் பல்கலைக்கு உண்டு.

ஏற்கனவே 2015-ம் ஆண்டு பள்ளி இறுதித் தேர்வின்போது மாடிக்கு மாடி தாவி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிட்டுகள் அல்ல புத்தகங்களையே கொடுத்த அவலம் நிகழ்ந்ததும் பீகாரில்தான்.+2 தேர்வு மதிப்பெண் ஊழல்,விடைத்தாள்கள் லீக் ஆவது என்று பீஹாரின் கல்வித்துறைக்கு பல சறுக்கல்கள் நிகழ்ந்திருப்பதால் அவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.