கேளிக்கை வரி செலுத்தாத 5 திரையரங்குகளுக்கு சீல்!

 

கேளிக்கை வரி செலுத்தாத 5 திரையரங்குகளுக்கு சீல்!

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கேளிக்கை வரியை செலுத்தாத 5 திரையரங்குகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கேளிக்கை வரியை செலுத்தாத 5 திரையரங்குகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் வளாகத்தில் ஏ.ஆர்.ஆர்.எஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. ஒரே வளாகத்தில் உள்ள 5 திரையரங்குகள் ஒரு வருடமாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரியைச் செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 

அந்த புகாரின் அடிப்படையில் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர். திரையரங்கம் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கின்ற டிக்கெட் விலையிலிருந்து அரசு ஆணைப்படி 30 சதவிகிதம் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு வருட காலமாக கேளிக்கை வரி செலுத்தாது குறித்து பலமுறை மாநகராட்சி சார்பில் திரையரங்க உரிமையாளருக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

arrs

ஆனால் அந்த நிறுவனம் கண்டு கொள்ளாத காரணத்தினால் தற்போது சீல் வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துள்ளனர். இது குறித்து சீல் வைக்கும் முன்பு அதிகாரிகள் திரையரங்கு உரிமளியாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர், அப்போது தங்களுக்கு எவ்வித அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை என திரையரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதனை மறுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய ஆதாரங்களைக் காண்பித்து திரையரங்குகளுக்குச் சீல் வைத்தனர்.