கேரள வெள்ளப் பிரளயத்தில் உயிரழந்தோர் எண்ணிக்கை 104 ஆனது!

 

கேரள வெள்ளப் பிரளயத்தில் உயிரழந்தோர் எண்ணிக்கை 104 ஆனது!

கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கன மழைக்கான “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளாது. 

கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தேயிலை தோட்டங்களில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தண்டவாளங்கள் நீரில்  மூழ்கியுள்ளதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

kerala flood

மழை வெள்ளத்திற்கு 1,30,000 ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளன. வீடிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம், வீடும் நிலம் இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 
ரூ.10  நிவாரணம் வழங்கப்படவுள்ளது.  மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை நிலச்சரிவில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ள. மண்ணுக்குள் இன்னும் 32 உடல்கள் புதையுண்டிருப்பதாக கூறப்படுகிறது. தொடர் மழையால் கேரளாவில் இதுவரை 104 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.