கேரள வெள்ளத்திற்கு நிவாரணம் அனுப்பிய லேத்விய பெண் யார் தெரியுமா?

 

கேரள வெள்ளத்திற்கு நிவாரணம் அனுப்பிய லேத்விய பெண் யார் தெரியுமா?

வீடியோவை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவுசெய்த முதல்வர் விஜயன், அப்பெண்மணியின் செயல் நெகிழ்ச்சிக்குறியது என பாராட்டு தெரிவித்திருந்தார். பின்புலத்தில் காரணம் இல்லாமலா இருக்கும்? இருக்கிறது. Ilze Skromane யார் என்றால், ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கடந்த வருடம் கேரளா வந்து, பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொல்லப்பட்டவரின் சகோதரி!

கனமழையால் பாதிக்கப்பட்டு நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கேரள மக்களுக்கு ஆறுதல் சொல்லும்விதமாக, லேத்வியா நாட்டு குடிமகள் ஒரு வீடியோ செய்தியை பதிவிட்டிருந்தார். எடியூரப்பா பெயரைக்கூட ஆங்கிலத்தில் தவறில்லாமல் எழுதிவிடலாம், இவர் பெயரை எப்படி எழுதுவது என தெரியவில்லை. நீங்களே முயற்சித்துக்கொள்ளுங்கள். Ilze Skromane. வீடியோ கூடவே, வெள்ள நிவாரண நிதிக்கென தன்னுடைய பங்காக ஒரு சிறிய தொகையையும் கேரள முதல்வருக்கு அளித்திருந்தார். மேற்கண்ட வீடியோவை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவுசெய்த முதல்வர் விஜயன், அப்பெண்மணியின் செயல் நெகிழ்ச்சிக்குறியது என பாராட்டு தெரிவித்திருந்தார். பின்புலத்தில் காரணம் இல்லாமலா இருக்கும்? இருக்கிறது. Ilze Skromane யார் என்றால், ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கடந்த வருடம் கேரளா வந்து, பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொல்லப்பட்டவரின் சகோதரி!

Ilze Skromane

எந்த ஒரு சராசரி மனிதனையும் கணக்கில்கொண்டால், எங்க அக்கா சாவுக்கு காரணமான உங்க ஊருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்டா என்று மனதுக்குள் ஒரு நொடியாவது யோசித்திருப்போம் இல்லையா? ஆனால், Ilze Skromane அப்படி எல்லாம் நினைக்கவில்லை. அந்த வீடியோவில் “என் அன்பார்த கேரள மக்களே உங்களை நான் மறக்கவில்லை, நீங்கள் படும் துன்பத்தையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், இந்த இக்கட்டான சூழலில் என்னால் முடிந்தது உங்களுக்காக கடவுளிடம் வேண்டுவதுதான், அதை மறக்காமல் செய்வேன்” என உறுதி அளித்திருக்கிறார்.