கேரள மாநிலத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

கேரள மாநிலத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கேரள மாநிலத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் திங்கட்கிழமையான இன்று கொல்லம் 6, திருச்சூர் 4, திருவனந்தபுரம்,ம் கண்ணூர் தலா 3 பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு, காசர்கோடு தலா 2, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் தலா 1 என 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது  இதில் 21 பேர் வெளிநாடுகளில் இருந்துவந்தவர்கள். 7 பேர் வேறு மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். ஒருவருக்கு பாதிக்கப்பட்டவரின் தொடர்பால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்று ஒருவரும் நோய் தொற்றில் இருந்து குணமாகவில்லை.

coronavirus

இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதிப்பு 101ல் இருந்து 130 க அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 630 பேர். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 497 பேர்.

தற்போது 67,789 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 67,316 பேர் வீடுகளிலும், 473 பேர் வீடுகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 45,905 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 44,651 பேரின் முடிவுகள் நோய்த்தொற்றிக்கு நெகடிவ் ஆக வந்துள்ளது” எனக்கூறினார்.