கேரள பாஜக தலைவரானார் சுரேந்திரன்! ம.பி., சிக்கிமிற்கும் தலைவர்கள் நியமனம்!! அப்ப தமிழ்நாடு? 

 

கேரள பாஜக தலைவரானார் சுரேந்திரன்! ம.பி., சிக்கிமிற்கும் தலைவர்கள் நியமனம்!! அப்ப தமிழ்நாடு? 

கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக  கே.சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

கேரள பாஜகவின் இடைக்காலத் தலைவராக இருந்த பி.எஸ்.ஸ்ரீதரன் மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதேபோல் தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் ஜெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இரு மாநிலங்களுக்கும் பாஜக தலைவர்கள் நியமிக்கப்படாமலிருந்த நிலையில்  கே. சுரேந்திரனை கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக நியமித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.  சுரேந்திரனின் பேச்சுக்கு மயங்காதவர் எவரும் இல்லை. அந்த அளவும் பேச்சாற்றலில் சாமர்த்தியம் படைத்தவர். 

k surendran

கோழிக்கோடு மாவட்டம், உளியேறியில் பிறந்தவர் சுரேந்திரன், மக்களவைத் தேர்தலில் பத்தினம்திட்டா தொகுதியிலும், இடைத் தேர்தலில் கொன்னி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதேபோல் மத்திய பிரதேச பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா, தல் பகதூர் சவுகான் சிக்கிம் மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனக்கு வந்த தலைவர் பொறுப்புக்குறித்து கூறிய சுரேந்திரன், பாஜக தலைமை என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் அளவிற்கு சிறப்பாக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.