கேரள அரசு மீது குடியரசு தலைவரிடம் புகார்

 

கேரள அரசு மீது குடியரசு தலைவரிடம் புகார்

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு மீது பாஜக தலைவர்கள் குடியரசு தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.

டெல்லி: சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு மீது பாஜக தலைவர்கள் குடியரசு தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தீர்ப்பை செயல்படுத்திய தீர வேண்டும் என கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக சபரிமலை வரும் பெண்களுக்கு கேரள அரசு சார்பில் காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. இதனால் போராட்டக்காரர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில்,  சபரிமலை விவகாரம் தொடர்பாக பாஜகவினர் நேற்று டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தனர். அப்போது கேரள அரசு மீது சபரிமலை விவகாரம் தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை  வைத்தனர். மேலும் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.