கேரளா ஸ்பெஷல்: மழைக்காலத்தில் சூடாக சுவைக்கலாம் நேந்திரம் சிப்ஸ்!

 

கேரளா ஸ்பெஷல்: மழைக்காலத்தில் சூடாக சுவைக்கலாம் நேந்திரம் சிப்ஸ்!

நேந்திரம் சிப்ஸ் என்றாலே அனைவருக்கும் கேரள மாநிலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது இது தமிழ்நாட்டிலும்  அதிகமாகக் கிடைக்கிறது.  

நேந்திரம் சிப்ஸ் என்றாலே அனைவருக்கும் கேரள மாநிலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது இது தமிழ்நாட்டிலும்  அதிகமாகக் கிடைக்கிறது.  உப்பும் காரமும் அளவாக உள்ளதால் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான தின்பண்டமாக இதை எடுத்துக்கொள்ளலாம். சிலர் அதைத் தேனில் ஊற வைத்துச் சாப்பிடுவர்.  தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இது  தேங்காய் எண்ணெய்யில் பொரிக்கப்படுகிறது. 

banana

தேவையான பொருட்கள்:

*நேந்திரங்காய்  -3

*உப்பு -1 தேக்கரண்டி 

*மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி 

*தேங்காய் எண்ணெய் 

chips

செய்முறை :

*ஒரு வாழைப்பழத்தை எடுத்து உலர வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

*எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து அதில் மிதமான சூடு வந்தவுடன்  நேந்திரம்  துண்டுகளை எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும்.

*சில வினாடிகள் கழித்து மஞ்சள்தூள் கலந்த தண்ணியை எண்ணெய்யில் கலந்து கிளறிவிட வேண்டும்.

*சிறிது நேரம் கழித்து சிப்ஸை எடுத்துவிடலாம்

*எண்ணெய்யில் இருந்து எடுத்தவுடன் அதை ஒரு காகித துணிமேல் வைத்தால் தேவை இல்லா எண்ணெய் வெளியேறும்.

*இதைச் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது தனியாக தின்பண்டமாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.